top 10 news tamil today july 17 2023

டாப் 10 செய்திகள்…. இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

பெங்களூருவில் எதிர்கட்சிகள் கூட்டம்

பாட்னாவை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில்  இன்றும் (ஜூலை 17), நாளையும் என பெங்களூருவில் 2 நாள் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

பெங்களூரு செல்கிறார் முதல்வர்!

பெங்களூருவில் நடைபெறும் 2 நாள் எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார்.

இன்று முதல் விண்ணப்பம்!

மருத்துவம் சார்ந்த பட்டய படிப்புகளுக்கு இன்று காலை 10 மணி முதல் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருநாள் விடுமுறை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூர் இணையசேவை முடக்கம் விசாரணை!

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள் நீடிப்பதால் இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

ஆஜராக சம்மன்!

கோவை டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக வலைதளங்களில் கருத்து தெரிவித்த 8 பேர் இன்று ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

முதலீட்டாளர்களே ரெடியா?

முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நெட்வெப் டெக்னாலஜிஸின் ஆரம்பப் பொதுப் பங்கீடு (ஐபிஓ) இன்று முதல் ஜூலை 19 வரை திறக்கப்படுகிறது.

நீட் முதுநிலை கவுன்சிலிங் இன்று கடைசி நாள்

தமிழ்நாடு நீட் முதுநிலை கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். மாணவர்கள் www.tnmedicalselection.net என்ற ஆன்லைன் முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தமிழ்நாட்டில் இன்று 422 ஆவது நாளாக விலையில் எந்த மாற்றமும் இல்லாமல்  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஜெயிலர் 2வது சிங்கிள்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ‘இது டைகரின் கட்டளை’ பாடல் இன்று வெளியாகிறது.

விம்பிள்டன்: சரித்திரம் படைத்த அல்காராஸ்

கலைஞர் நூற்றாண்டு நூலகம்! தி.மு.க என்ற அறிவியக்கத்தின் அடையாளம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *