top 10 news Tamil today January 17 2024

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

அலங்காநல்லூரில் உதயநிதி! top 10 news Tamil today January 17 2024

உலகப் புகழ்பெற்ற  மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று (ஜனவரி 17) காலை 7 மணி அளவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.

சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் மோடி

நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபியின் மகளின் திருமண விழாவில் பிரதமர் மோடி இன்று பங்கேற்க உள்ளார்.

மெரினாவில் குளிக்க தடை!

காணும் பொங்கல் தினத்தையொட்டி இன்று சென்னை மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக 17,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை போலீசார் வேண்டுகோள்!

மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் பார்க்கிங் கொடுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் சென்னை போக்குவரத்து போலீசார் வேண்டுகோள்.

ஜோதிபாசு நினைவு நாள்!

மேற்கு வங்காளத்தில் 23 ஆண்டுகள் முதல்வராக இருந்து பிரதமர் பதவியை மறுத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதி பாசு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

லால்பாக்கில் மலர் கண்காட்சி!

குடியரசு தினத்தை ஒட்டி 11 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சியை பெங்களூரு லால்பாக்கில் இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார்.

புதிய சுற்றுவட்டப் பாதை திறப்பு!

ஒடிசா புரி ஜெகந் நாதர் கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய சுற்றுவட்டப் பாதையை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இன்று திறந்து வைக்கிறார்.

கடைசி டி20 போட்டி!

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 606வது நாளாக விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வறண்ட வானிலை நிலவும்!

குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ் : வீட்டிலேயே ஈஸியா தயாரிக்கலாம் கண் மை!

கிச்சன் கீர்த்தனா : சேமியா புலாவ்

top 10 news Tamil today January 17 2024

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *