top 10 news Tamil today January 15 2024

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணிராதீங்க!

அரசியல்

தை பொங்கல் கொண்டாட்டம்! top 10 news Tamil today January 15 2024

தமிழர் திருநாளான தை பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு!

மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டில் ஆயிரம் காளைகள், 600 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் வீரர்களுக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

மணிப்பூரில் ராகுல் காந்தி!

பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் இரண்டாவது நாளான இன்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது பயணத்தை மேற்கு இம்பாலில் இருந்து காலை 8 மணிக்கு தொடங்குகிறார்.

மகர விளக்கு பூஜை!

பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் முக்கிய நிகழ்வான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெறுகிறது.

டாஸ்மாக் கடைகள் மூடல்!

ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு இன்று அவனியாபுரம் பகுதிகளிலும், நாளை ஜனவரி 16ஆம் தேதி அன்று பாலமேடு பகுதிகளிலும், ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூர் பகுதிகளிலும் மது கடைகளை மூட மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் உத்தரவு!

கடுமையான பனிப்பொழியும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை 9 மணிக்கு முன்பு எந்த பள்ளியும் திறக்கப்பட கூடாது என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

வேட்டையன் அப்டேட்!

ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்தின் புதிய போஸ்டர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

GOAT அப்டேட்!

இயக்குநர் வெங்கட் பிரபுவின் பதிவை தொடர்ந்து, நடிகர் விஜயின் Greatest Of All Time திரைப்படத்தின் அப்டேட் பொங்கல் தினமான இன்று வெளியாக வாய்ப்புள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில்  இன்று 604வது நாளாக விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

இனி மழை கிடையாது!

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையின்றி வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

சார்வாகர் கூறும் தேசியத்தின் உண்மைகளும், பொய்களும் – அறிஞர் பார்த்தா சாட்டர்ஜி அளித்துள்ள அபூர்வ நூல்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணிராதீங்க!

top 10 news Tamil today January 15 2024

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0