கணித் தமிழ் மாநாடு!
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (பிப்ரவரி 8) முதல் 3 நாட்களுக்கு பன்னாட்டு கணித் தமிழ் மாநாடு நடைபெற உள்ளது.
அமைச்சர்கள் வழக்கு விசாரணை!
அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ .பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.
திமுக எம்பிக்கள் டெல்லியில் போராட்டம்!
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து தமிழக எம்பிக்கள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்த உள்ளனர்.
பாகிஸ்தான் பொதுத்தேர்தல்!
பாகிஸ்தானில் அடுத்த அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
ஈரோட்டில் உதயநிதி
ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறையின் கீழ் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறுகிறது.
உயர்கல்விக்கான தெற்காசிய மாநாடு!
வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, உயர்கல்விக்கான தெற்காசிய மாநாடு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற உள்ளது.
ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள்!
தை அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரம் செல்ல ஏதுவாக சென்னை கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களிலிருந்து இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
144 தடை உத்தரவு!
விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் விளைவாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் உத்தரபிரதேச காவல்துறையானது நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா இன்று 144 தடை உத்தரவை நகரில் அமல்படுத்தி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 628வது நாளாக விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
2வது அரையிறுதிப் போட்டி!
U19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோத உள்ளன. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு பெனோனியில் போட்டி தொடங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பாலக் பாஸ்தா
மெல்லத் திறந்தது கதவு: அப்டேட் குமாரு