top 10 news Tamil today February 11 2024
மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் மோடி
மத்தியப் பிரதேசத்திற்கு இன்று (பிப்ரவரி 11) பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி ஜபுவாவில் சுமார் 7500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பில்லூர் 3-வது கூட்டுக் குடிநீர் திட்டம்!
கோவையில் பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கும் பணியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
‘என் மண் என் மக்கள்’ நிறைவு!
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை சென்னையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
ஜே.பி.நட்டா சென்னை வருகிறார்!
என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு நாளையொட்டி தங்க சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று சென்னை வருகிறார்.
வெற்றி துரைசாமி குடும்பத்தாரிடம் டிஎன்ஏ பரிசோதனை!
இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில் அவர் குடும்பத்தாரிடம் இன்று டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஜே.பி.நட்டாவை சந்திக்கும் தலைவர்கள்!
சென்னைக்கு இன்று வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை ஓபிஎஸ், டிடிவி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேசுகின்றனர்.
44 மின்சார ரயில்கள் ரத்து!
தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் இன்ஜினியரிங் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
பைனலில் இந்தியா-ஆஸ்திரேலியா!
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெனோனியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
வறண்ட வானிலை நிலவும்!
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 631வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கான லிப் பாம் எது?
சண்டே ஸ்பெஷல்: சுவையான சூப் தயாரிக்க ஈஸி டிப்ஸ்!
top 10 news Tamil today February 11 2024