அரையாண்டு தேர்வுகள் தொடக்கம்! top 10 news Tamil today December 13 2023
தமிழ்நாடு முழுவதும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் இன்று (டிசம்பர் 13) முதல் தொடங்குகிறது.
இன்று மத்திய குழுவினர் ஆய்வு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
தமிழ்நாடு அரசு மனு மீது விசாரணை!
ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம் என அறிவிக்க கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
ஆர்.கே.சுரேஷிடம் 2வது நாளாக விசாரணை!
ஆருத்ரா மோசடி தொடர்பாக இன்று 2வது நாளாக நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
மத்தியப் பிரதேச முதல்வராக பதவியேற்பு!
மத்தியப் பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் இன்று பதவி ஏற்க உள்ளார். அவருடன் துணை முதல்வர்களாக ராஜேந்திர சுக்லா, ஜெக்தீஷ் தேவ்தா ஆகியோரும் பதவி ஏற்க உள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை விற்பனை!
சென்னையில் இன்று 571 ஆவது நாளாக விலை மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடிகர் வெங்கடேஷ் பிறந்தநாள்!
தெலுங்கில் முன்னணி நடிகரான ’விக்டரி’ வெங்கடேஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் டகுபதி வெங்கடேஷ் இன்று தனது 64வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
சலார் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
பிரபாஸ் நடிப்பில் ஹம்பாலே நிறுவனம் தயாரித்துள்ள சலார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
60 நொடிகளுக்குள் அடுத்த ஓவர்!
ஒரு ஓவர் முடிந்த நேரத்திலிருந்து 60 நொடிகளுக்குள் அடுத்து ஓவர் வீசப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறையை இன்று நடைபெறும் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் இருந்து ஐசிசி அறிமுகம் செய்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்படும் துரை தயாநிதி?
top 10 news Tamil today December 13 2023