ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்!
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 3) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இலங்கை செல்கின்றனர்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் மூவரும் இன்று இலங்கைக்கு செல்ல உள்ளனர்.
திருவண்ணாமலையில் பிரச்சாரம்!
திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை, ஆரணி எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!
மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று மாலை 3 மணிக்கு அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
வெயிலும் இருக்கு… மழையும் இருக்கு!
வடதமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களில் வெப்பநிலை 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். தென் தமிழகம், காரைக்கால், டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மாற்றம்!
கதீட்ரல் சாலை அமராவதி ஓட்டல் முன்பு உள்ள சர்வீஸ் சாலையில் உள்ள பாதாள சாக்கடை முழுவதுமாக சேதமடைந்துள்ளதால், இன்று முதல் 7 நாட்களுக்கு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
டெல்லி – கொல்கத்தா அணிகள் மோதல்!
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப்!
உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவின் டொரோன்டோ நகரில் இன்று தொடங்குகிறது.
‘சியான் 62’ பட அப்டேட்!
விக்ரமின் ‘சியான் 62’ படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று விலை மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : வெள்ளரி சாப்ஸ்
பன்னீர் ‘பழக்க’ தோஷம்: அப்டேட் குமாரு
பார்ட் டைம் அரசியல்வாதி… நாதஸ் திருந்திட்டான் காமெடிதான்… : மோடி – எடப்பாடியை தாக்கிய ஸ்டாலின்