top 10 news tamil today april 27 2024

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி கூடுகிறது!

காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி உள்ளிட்ட பல தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்க இருப்பதை முன்னிட்டு கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி இன்று (ஏப்ரல் 27) மாலை கூடுகிறது.

சுனிதா கெஜ்ரிவால் ரோடு ஷோ!

மக்களவை தேர்தலையொட்டி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக இன்று கிழக்கு டெல்லி தொகுதியில் ரோடு ஷோ நடத்துகிறார்.

திநகரில் போக்குவரத்து மாற்றம்!

மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் இன்று முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்!

வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசித் தேதி ஆகும்.

ஊட்டி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

கோடை சீசனையொட்டி ஊட்டி – மேட்டுப்பாளையம் சாலை இன்று முதல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.

19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

’ஸ்டார்’ டிரைலர் வெளியாகிறது!

கவின் நடித்துள்ள ’ஸ்டார்’ படத்தின் டிரைலர் இன்று காலை 11.11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

குக் வித் கோமாளி தொடங்குகிறது!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி இன்று முதல் தொடங்குகிறது.

டெல்லி – மும்பை அணிகள் மோதல்!

அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. ஏக்னா மைதானத்தில் நடக்கும் மற்றொரு போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 43-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்பனையாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“குரங்கு பெடல்” ஃபர்ஸ்ட் சிங்கிள்: ஸ்பெஷல் என்ன?

கிச்சன் கீர்த்தனா: பாவ் பாஜி தோசை ரோல்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0