வெப்ப அலை வீசும்!
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 25) இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குவாரி வழக்கில் ஆட்சியர்கள் ஆஜர்!
உச்சநீதிமன்ற உத்தரவுபடி மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர்.
பிரச்சாரம் ஓய்ந்தது!
இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை ஓட்டுப்பதிவு நடைபெறும் நிலையில் வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பால் மாவின் விலை குறைகிறது!
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பட்டுக்கோட்டைக்கு மின்சார ரயில்!
திருவாரூர் – பட்டுக்கோட்டை இடையே இன்று முதல் தினமும் காலை 8.30 மணிக்கு மின்சார ரயில் சேவை தொடங்கப்படுகிறது.
உலக மலேரியா தினம்!
மலேரியா நோயை கட்டுப்படுத்தவும், அந்நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 2007-ம் ஆண்டு முதல் ஏப்ரல் 25ஆம் தேதி உலக மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இலக்கிய ஆளுமைகளின் பிறந்தநாள்!
மு.வ. என்னும் இரண்டெழுத்துகளாலே உலகெங்கும் புகழ்பெற்ற பேராசிரியர், தமிழறிஞர் மு.வரதராசனார் மற்றும் தமிழ் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் புதுமைப்பித்தன் பிறந்த தினம் இன்று.
ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதல்!
ஐதராபாத் நகரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 41வது ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
சென்னை போட்டிக்கு டிக்கெட்!
சென்னையில் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறும் சென்னை – ஐதராபாத் அணிகளின் போட்டிக்கான டிக்கெட் இன்று காலை 10.40 மணிக்கு ஆன்லைன் மூலம் விற்பனை தொடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 41-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: முந்திரி சாக்கோ ரோல்
டிஜிட்டல் திண்ணை: பங்குபோடும் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன்… ஸ்டாலினை டென்ஷன் ஆக்கிய South