இயக்குநர் அமீர் ஆஜராகிறார்!
போதைப் பொருள் கடத்தல் வழக்கு விசாரணைக்கு டெல்லியில் இன்று (ஏப்ரல் 2) இயக்குநர் அமீர் உட்பட மூன்று பேர் நேரில் ஆஜராகவுள்ளனர்.
வேலூரில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!
திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரிலும், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியிலும் இன்று பரப்புரை மேற்கொள்கின்றனர்.
சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை!
மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
11 ரயில் சேவையில் மாற்றம்!
சென்னையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் 11 ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள்!
இன்று சர்வதேச உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (WORLD AUTISM AWARENESS DAY) கடைப்பிடிக்கப்படுகிறது.
சென்னையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!
தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
விமான நிலையங்களில் வேலை!
இந்திய விமான நிலையங்களில் அறிவிக்கப்பட்டுள்ள 490 காலி பணியிடங்களுக்கு https://www.aai.aero/en/recruitment/release/307779 என்ற இணையதளம் வழியாக இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பெங்களூரு – லக்னோ அணிகள் மோதல்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று விலை மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 100.75 க்கும், டீசல் ரூபாய் 92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மிதமான மழைக்கு வாய்ப்பு!
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : புடலங்காய் ராய்த்தா
இது ‘கச்சத்தீவு’ டைவர்சன் : அப்டேட் குமாரு