டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

’மக்களுடன் ஸ்டாலின்’ செயலி!

வேலூரில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற உள்ள திமுகவின் பவளவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‛மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

யஷோபூமி திறந்து வைக்கிறார் பிரதமர்!

டெல்லியில் “யஷோபூமி” என பெயரிடப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.

பெரியார் – மோடி பிறந்தநாள்!

தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் மற்றும் பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

அமலுக்கு வரும் ’விஸ்வகர்மா யோஜனா’!

குலத்தொழிலை ஊக்குவிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் மத்திய அரசின் ’விஸ்வகர்மா யோஜனா’ என்ற திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

10 மாவட்டங்களில் கனமழை!

தமிழ்நாட்டில் இன்று கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இறுதிப்போட்டில் மோதும் இந்தியா – இலங்கை

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற உள்ள ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா மற்றும் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்!

இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள், மற்றும் தீயணைப்பாளர்கள் பதவிகளுக்கான நேரடித் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

உலக நோயாளி பாதுகாப்பு தினம்!

நோயாளி பாதுகாப்பு பற்றி உலகளாவிய புரிதலை மேம்படுத்தவும், சுகாதார பாதுகாப்பில் மக்கள் பங்களிப்பை அதிகரிக்கவும் வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் சார்பில் இன்று ‘உலக நோயாளி பாதுகாப்பு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

உதயநிதி தலைமையில் திமுக கூட்டம்!

அமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வேலூர் மாவட்ட-மாநகர அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தமிழ்நாட்டில் இன்று 484வது நாளாக விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும்விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு : HAL நிறுவனத்தில் பணி!

சண்டே ஸ்பெஷல்: ஹோட்டல் உணவுகள் சாப்பிட்டால் அல்சர் வருமா?

 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *