சட்டமன்ற கூட்டம் துவக்கம்!
தமிழக சட்டப்பேரவை இன்று (அக்டோபர் 17) காலை 10 மணிக்கு கூடுகிறது. இன்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.
ஒரே நாடு, ஒரே உரம் திட்டம்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல்!
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக 51-வது ஆண்டு விழா!
அதிமுக 51-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.
பள்ளிகளுக்கு விடுமுறை!
ஈரோடு மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக, அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவுத்திடல் பட்டாசு விற்பனை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.
உலக கோப்பை டி20 போட்டி!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன. மற்றொரு போட்டியில், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 149-வது நாளாக, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மருத்துவ படிப்பு தர வரிசை!
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது.
தசரா அப்டேட்!
கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 11.11 மணியளவில் தசரா திரைப்படத்தில் அவர் நடித்த புதிய போஸ்டர் வெளியாகிறது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: எடப்பாடி ஆலோசித்தது என்ன?
அமித்ஷா பதவி விலக வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்!