முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்!
திருவாரூர் அருகே உள்ள கொரடாச்சேரியில் இன்று (மார்ச் 23) மாலை 6 மணிக்குநடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தஞ்சை தி.மு.க வேட்பாளர் முரசொலி, நாகை கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் ஆகியோரை அறிமுகம் செய்து முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் சீமான்
சென்னை பல்லாவரத்தில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 40 மக்களவைத் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைக்கிறார்.
பிரச்சாரத்தை தொடங்கும் உதயநிதி
தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து இன்று காலை தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
சென்னை – குஜராத் போட்டி டிக்கெட் விற்பனை!
வரும் 26ஆம் தேதி சேப்பாக்கில் நடைபெறும் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வேட்புமனு தாக்கல் கிடையாது!
இன்றும், நாளையும் பொது விடுமுறை தினங்கள் என்பதால் இரு நாட்களுக்கு தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இயலாது.
பகத் சிங் நினைவுநாள்!
இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் வரலாற்றில் அழிக்க முடியாத அடையாளத்தை பதித்து தூக்கு மேடையில் உயிர் துறந்த பகத் சிங் நினைவுநாள் இன்று!
சென்னை- நெல்லை சிறப்பு ரெயில்!
ஹோலி பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் (வண்டி எண் 06051) இருந்து இன்று இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், நாளை காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.
ஊருக்கு செல்ல கூடுதல் பேருந்து!
வார இறுதியை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 390 பஸ்களும் மற்றும் சென்னை கோயம்பேட்டில் இருந்து 65 பஸ்களும் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு லீக் போட்டிகள்!
ஐ.பி.எல் தொடரில் 2-வது நாளான இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஆவக்காய் ஊறுகாய்
CSK vs RCB: தொட்டதெல்லாம் ‘தூள் பறக்குது’… கொண்டாடி கொளுத்தும் ரசிகர்கள்!