வெள்ளை அறிக்கை மீது விவாதம்! top 10 news Tamil February 9
மத்திய அரசின் பத்தாண்டு கால பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில் இன்று (பிப்ரவரி 9) அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!
எம்.ஜி.ஆர் குறித்து அவதூறாகப் பேசிய நீலகிரி திமுக எம்.பி ஆ.ராசாவைக் கண்டித்து அவிநாசியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
காஞ்சிபுரம் புத்தக திருவிழா!
காஞ்சிபுரத்தில் 100 அரங்குகளில், சுமார் 50 ஆயிரம் தலைப்புகளில் பல இலட்சக்கணக்கான புத்தகங்களுடன் மாபெரும் புத்தக திருவிழா இன்று முதல் துவங்குகிறது.
500 சிறப்பு பேருந்துகள்!
வார விடுமுறை மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இன்று 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 629வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் சென்னை உட்பட ஒரு சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ஒரேநாளில் 4 திரைப்படங்கள்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம், பிரபுராம் வியாஸ் இயக்கிய லவ்வர், இயக்குநர் ராஜன் இயக்கிய இமெயில் ஆகிய திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
சேப்பாக்கத்தில் இலவச அனுமதி!
தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் மோதும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியை காண இன்று முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா – இந்தியா மோதல்!
மகளிருக்கான 5-வது புரோ ஹாக்கி லீக் தொடரில் இன்று புவனேஸ்வரில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவுடன் மோதுகிறது.
முதலாவது டி20 போட்டி!
ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி ஹாபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு துவங்குகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: பொட்டு… உங்களுக்கு ஏற்றது எது?
கிச்சன் கீர்த்தனா: இந்தியன் ஸ்டைல் பாஸ்தா
top 10 news Tamil February 9