4 மாவட்டங்களுக்கு விடுமுறை! top 10 news Tamil December 7 2023
சென்னை, திருவள்ளூரில் முழுவதுமாகவும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 7) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு!
சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். பின்னர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார்
தெலுங்கானா முதல்வராக பதவியேற்பு!
தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி அம்மாநில முதல்வராக இன்று பதவியேற்க உள்ளார்.
பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம்!
பாஜக வென்ற மாநிலங்களில் அடுத்த முதலமைச்சர் யார்? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
மின்சார ரயில்கள் இயங்கும்!
சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் வழக்கமான அட்டவணையின்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்!
சென்னையில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நாளை முதல் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஆவின் பால் விநியோகம்!
நிலைமை சீராகிவிட்டதால், இன்று முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது எனறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு!
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் அனைத்துஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மீட்பு பணியில் விஜய் ரசிகர்கள்!
நடிகர் விஜய் விடுத்த வேண்டுகோளை அடுத்து கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் அவரது ரசிகர்கள் தன்னார்வலர்களாக செயலாற்ற உள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 565வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பாஸ்தா சுண்டல்
சென்னைக்கு வந்தது சென்னையோடு போகட்டும்: அப்டேட் குமாரு
top 10 news Tamil December 7 2023