top 10 news Tamil December 16 2023

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

ஆரஞ்ச் அலர்ட்! top 10 news Tamil December 16 2023

மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய 4 தென் மாவட்டங்களுக்கு இன்றும் (டிசம்பர் 16) நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்!

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் 7 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நடந்த நிலையில், தலைவர், செயலாளர் பதவி தவிர்த்து மற்ற பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

மீனவர்களும் கடும் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

போக்குவரத்து மாற்றம் அமல்!

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

சபரிமலை செல்ல சிறப்பு ரயில்!

சபரிமலை சீசனையொட்டி, சென்னை தாம்பரம் – கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று மதியம் 1.30க்கு புறப்படும் சிறப்பு ரயில், நாளை காலை 6.45 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

விஷ்ணுபுரம் விருதுகள் விழா!

2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுகள் வழங்கும் விழா கோவையில் இன்று காலை தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் ரோகித்

டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா தென்னாப்பிரிக்காவிற்கு இன்று புறப்பட்டு சென்றார்.

நடிகர் காளிதாஸ் பிறந்தநாள்!

கேரள நடிகர் ஜெயராமின் மகனும், நடிகருமான காளிதாஸ் ஜெயராம் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

யமஹாவின் ஒய்இசட்எஃப் ஆர் 3 அறிமுகம்!

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ’ஒய்இசட்எஃப் ஆர் 3’ என்ற பைக்கை ரூபாய் 4.65 லட்சம் விலையில் இந்தியாவில் யமஹா நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 574 வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கார கொள்ளு புட்டு

பெரியவர டிஸ்சார்ஜ் பண்ணிட்டு சின்னவர அட்மிட் பண்ணுங்க: அப்டேட் குமாரு

top 10 news Tamil December 16 2023

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *