வல்லபாய் படேல் நினைவு தினம்! top 10 news Tamil December 15 2023
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்பட்ட வல்லபாய் படேலின் 73வது ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 15) அனுசரிக்கப்படுகிறது.
மஹுவா மொய்த்ரா வழக்கு விசாரணை!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா வகித்த மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் பதவியேற்பு!
ராஜஸ்தான் மாநில ஆளும் பாஜக அரசின் முதல்வராக பஜன் லால் சர்மா இன்று பதவியேற்க உள்ளார்.
சென்னை ஐஐடி குழு அறிக்கை தாக்கல்!
எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு பாதிப்பை ஆய்வு செய்து வரும் சென்னை ஐஐடி குழு விரிவான அறிக்கையைத் தமிழ்நாடு அரசிடம் இன்று சமர்ப்பிக்க உள்ளது. மேலும் எண்ணெய் கழிவை அகற்றும் பணி தொடர்பாக ஒடிசா மாநிலத்தில் இருந்து வல்லுநர் குழு இன்று சென்னை வருகின்றனர்.
சபரிமலைக்கு செல்ல வந்தே பாரத்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் நலனுக்காக இன்று முதல் டிசம்பர் 15, 17, 22, 24 ஆகிய நாட்களில் சென்னை – கோட்டயம் இடையே சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தை அடையும்.
68-வது தேசிய ரயில்வே விருது!
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று 68-வது தேசிய ரயில்வே விருதுகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்குகிறார்.
தென்னாப்பிரிக்கா செல்கிறது இந்திய அணி!
ரோஹித் ஷர்மா உள்ளிட்ட இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் இன்று தென்னாப்பிரிக்கா புறப்பட உள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 573 ஆவது நாளாக விலை மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மூன்று தமிழ் திரைப்படங்கள் வெளியாகின்றன!
வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள “ஆலம்பனா”, கீர்த்தி பாண்டியன் நடிப்பில் ‘கண்ணகி’ மற்றும் உறியடி விஜய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் “ஃபைட் கிளப்” ஆகிய 3 தமிழ் திரைப்படங்கள் இன்று வெளியாகிறது.
மிதமான மழைக்கு வாய்ப்பு!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நார்த் இண்டியன் வெஜ் ஆம்லெட்
விக்னேஷ் சிவனின் அடுத்த படம்: ஒருவழியா பூஜை போட்டாச்சு!
“ஈரம்” இயக்குனரின் அடுத்த படம்: போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
சர்வதேச விழாவில் வினோத் ராஜின் கொட்டுக்காளி: மகிழ்ச்சியில் சிவா
top 10 news Tamil December 15 2023