5வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்! top 10 news Tamil December 12 2023
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை பாதிப்பினை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் 5வது நாளாக இன்றும் (டிசம்பர் 8) போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 2 தாலுகாக்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 6 வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரேஷன் கடைகள் இயங்கும்!
சென்னை உட்பட 4 மாவட்டங்களிலும் பொதுமக்களின் வசதிக்காக இன்று ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட்டில் பிரதமர்!
உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார்.
முதல்வராக பதவியேற்பு!
மிசோரமில் 27 தொகுதிகளில் வென்ற ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டுஹோமா இன்று முதல்வராக பதவியேற்க உள்ளார்.
முதல்வர்கள் யார்? – பாஜக முடிவு!
பாஜக வென்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான முதல்வரை இன்று பாஜக தேசிய தலைமை முடிவு செய்ய உள்ளது.
92 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!
ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் 23ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல் – விஜயவாடா இடையே 92 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழில் 3 படங்கள் ரிலீஸ்!
திரையரங்குகளில் இன்று ’கான்ஜுரிங் கண்ணப்பன்’, ’கட்டில்’, ’தீ இவன்’ ஆகிய நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
மலையாளப் படமான ‘அவள் பெயர் ரஜ்னி’ மற்றும் நானி நடிப்பில் தெலுங்கு படமான ‘ஹாய் நான்னா’ தமிழில் டப் செய்யப்பட்டு இன்று வெளியாகிறது.
ஜூனியர் ஆசிய கோப்பை தொடக்கம்!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 566வது நாளாக விலை மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: முள்ளங்கி சூப்
பியூட்டி டிப்ஸ்: செல்ஃப் குரூமிங்… செய்துகொள்ள தயக்கம் வேண்டாம்!
top 10 news Tamil December 12 2023