டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Monisha

top 10 news tamil

நிலக்கரி சுரங்கம் விவகாரம்!

புதிய நிலக்கரி சுரங்கங்கள் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 5) சட்டப்பேரவையில் பேச உள்ளார்.

பாஜக ஆர்ப்பாட்டம்!

நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் மாவட்ட தலைவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாஜகவினர் இன்று 10 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

காவலர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பங்குனி உத்திரம்!

சென்னிமலை முருகன் கோவிலில் இன்று பங்குனி உத்திரம் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

பழனி சிறப்பு ரயில்!

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 319வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புஷ்பா 2 அப்டேட்!

நடிகை ராஷ்மிகா பிறந்தநாளை முன்னிட்டு அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா திரைப்படத்தின் அப்டேட் இன்று காலை 11.07 மணிக்கு வெளியாகவுள்ளது.

இராவண கோட்டம் டிரெய்லர்!

சாந்தனு, கயல் ஆனந்தி நடித்துள்ள இராவண கோட்டம் திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் சிம்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்.

ஐபிஎல் 2023!

ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

IPL தொடரில் இருந்து வெளியேறிய பெங்களூரு அணி வீரர்!

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எடப்பாடி, அண்ணாமலை கூட்டணித் தூண்டில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share