டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

பரந்தூர் விமான நிலையம் ஆலோசனை!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (டிசம்பர் 20) அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய இருக்கின்றனர்.

ராகுல் நடைபயணம்!

ராகுல் காந்தி இன்று ஒற்றுமை நடைபயணம் 103-வது நாள் ராஜஸ்தான் மாநிலம் புர்ஜா பகுதியில் துவங்கி ராம்கார் பகுதியில் நிறைவு செய்கிறார்.

மின் இணைப்புடன் ஆதார் எண் தீர்ப்பு!

மின்சார மானியம் பெற மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தக்கூடாது என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

மீனவர்களுக்கு அறிவிப்பு!

கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வாரிசு மூன்றாவது பாடல்!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் மூன்றாவது பாடலான It’s for you amma இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆலோசனை!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் விழா கமிட்டியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவது குறித்து இன்று ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 212-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

வானிலை நிலவரம்!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்தியா, ஆஸ்திரேலியா மோதல்!

இந்தியா, ஆஸ்திரேலியா பெண்கள் அணி மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

முதலில் ராவல்பிண்டி… அடுத்து காபா: சிக்கலில் கிரிக்கெட் ஆடுகளங்கள்!

எம்ஜிஆர் – ஜெயலலிதா மட்டுமே ஏழைகளுக்காக வாழ்ந்தவர்கள்: எடப்பாடி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *