மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!
பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி இன்று (நவம்பர் 5) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
புதுச்சேரி மாநில தகுதி!
புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்க கோரி தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் இன்று புதுச்சேரியில் பரப்புரை இயக்கம் தொடக்க நிகழ்வு நடைபெறுகிறது.
ரஜினி படம் அப்டேட்!
லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகிறது.
கனமழை விடுமுறை!
கன மழை காரணமாக, தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் விலை உயர்வு!
ஆவின் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டு, ரூ.60-க்கு இன்று முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.
மொழியுரிமை பாதுகாப்பு மாநாடு!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் இன்று மொழியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது.
ரஞ்சிதமே பாடல் வெளியீடு!
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது.
சென்னை மருத்துவ முகாம்!
சென்னையில் இன்று 200 வார்டுகளில் மழைக்கால மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 168-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக கோப்பை போட்டி!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
மழையால் வீடு இடிந்து ஒருவர் பலி: போலீஸ் விசாரணை!
டி20 உலகக்கோப்பை: அரையிறுதி கனவைச் சிதைத்த அந்த 185 ரன்கள்!