டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!!!

Published On:

| By Kavi

சென்ட்ரல் விஸ்டா வளாகம் இன்று திறப்பு

நாடாளுமன்ற கட்டடம், பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர் இல்லங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் வளாகத்தைப் பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 8) தொடங்கி வைக்கவுள்ளார்.

அதிமுக அலுவலகத்துக்கு செல்லும் எடப்பாடி

72 நாட்களுக்குப் பின்னர், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று செல்கிறார். கட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதல்வர்!

இன்று காலை (செப்டம்பர் 8) திருநெல்வேலி, பாளையங்கோட்டை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் ரூ.330 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். நிகழ்ச்சிக்கு பிறகு கார் மூலம் மதுரை வருகிறார்.

ராகுலின் இரண்டாவது நாள் பாதயாத்திரை

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் நேற்று தனது பாதயாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. இன்று அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பகுதியிலிருந்து தனது இரண்டாவது நாள் யாத்திரையை தொடங்கினார். கொட்டாரம், சுசீந்திரம், கோட்டார் வழியாக நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் 2ஆவது நாள் பயணத்தை நிறைவு செய்கிறார்.

ஓணம் கொண்டாட்டம்!

திருவோண பண்டிகை கேரள மக்களின் திருவிழா என்றாலும் தமிழகத்திலும் இவ்விழா விமர்சையாகக் கொண்டாடப்படும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35 லட்சத்து 71 ஆயிரத்து 924 ஆக உள்ளது. நேற்று அதிகபட்சமாக சென்னையில் 81 பேரும், கோவையில் 59 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 110வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி 1லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் 94.24க்கும் விற்பனையாகிறது.

நீட் தேர்வு முடிவு!

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தாமதமாக நள்ளிரவுதான் அறிவிக்கப்பட்டது. இதில், ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா முதலிடம் பெற்றுள்ளார்.

இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதல்!

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்து வீழ்ந்ததால் இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

சதுரகிரி செல்ல அனுமதி!

சதுரகிரி கோயிலுக்குஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று முதல் 11ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை நாங்கள் வெளியிடட்டுமா?: ஆர்.எஸ்.பாரதி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel