மின் கட்டணம் : அதிமுக போராட்டம்!
மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று (செப்டம்பர் 16) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சினம் படம் இன்று ரிலீஸ்
ஜி.என்.குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘சினம்’ படம் இன்று வெளியாகிறது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ளார்.
மீண்டும் பயணத்தைத் தொடங்கும் ராகுல்
குமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளார். இதுவரை 150 கிலோ மீட்டருக்கும் மேலாக நடைபயணம் மேற்கொண்ட அவர் காலில் ஏற்பட்ட கொப்புளம் காரணமாக நேற்று ஓய்வெடுத்துக் கொண்டார். இன்று மீண்டும் தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.
கமலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம்!
இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கோவை செல்கிறார். இன்று காலை 11.45 மணியளவில் கே.ஜி.தியேட்டரில் நடைபெறும் விக்ரம் படத்தின் 100ஆவது நாள் விழாவில் கலந்துகொள்கிறார்.
மோட்டோரோலாவின் புதிய போன் அறிமுகம்
மோட்டோரோலா நிறுவனம் இன்று (செப்டம்பர் 16) புதிய மோட்டோ இ22 (Moto E22) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. இந்த புதிய மாடல் போன் பட்ஜெட் விலையில் இருக்கும் என்றும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் நேற்று மொத்தம் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35,75,380 ஆக அதிகரித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 16) 118ஆவது நாளாக, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொழில்துறை மாநாட்டில் முதல்வர்!
விருதுநகரில் முப்பெரும் விழா முடிந்த நிலையில் இன்று மதுரைக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு தொழில் துறை தொடர்பான மண்டல அளவிலான மாநாட்டில் பங்கேற்கிறார். அவர் முன்னிலையில் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10ஆம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவு!
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வு முடிவின் மீது மறுகூட்டல் கேட்டு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் செய்யப்பட்ட பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று மதியம் வெளியாகிறது.
சபரிமலை நடை திறப்பு!
புரட்டாசி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 21ஆம் தேதி வரை 5 நாள்கள் பூஜைகள் நடைபெறவுள்ளது.
சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை!