டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்!

புவி கண்காணிப்பு செயற்கைக் கோளுடன் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் இன்று (நவம்பர் 26) விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு தினம்!

இன்று இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பிடிஓ அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம்!

சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் புவிசார் (GPS) நவீன தானியங்கி பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டத்தை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

கால்பந்து போட்டி!

ஃபிஃபா உலக கால்பந்து போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, துனிசியா அணிகள் மோதுகின்றன. மற்ற பிரிவுகளில் போலந்து, சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 189-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மநீம முன்னெடுப்பு கூட்டம்!

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக முன்னெடுப்பு கூட்டம் இன்று சென்னை பட்டாபிராம் பகுதியில் நடைபெறுகிறது.

சல்லியர்கள் ட்ரெய்லர் ரிலீஸ்!

தி.கிட்டு இயக்கிய சல்லியர்கள் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகிறது.

விவசாயிகள் பேரணி!

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கி இன்று விவசாயிகள் பேரணி நடத்த உள்ளனர்.

வானிலை நிலவரம்!

கேரள கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.

வாக்காளர் அட்டை சிறப்பு முகாம்!

வாக்காளர் அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் சிறப்பு முகாம்கள் இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ரிலீஸ் எப்போது?

மின் கட்டணம்: ஆதார் இணைப்பதற்கு அவகாசம் நீட்டிக்கப்படுமா?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0