டாப் 10 செய்திகள்…இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

லண்டன் சென்றடைந்தார் திரவுபதி முர்மு!

இங்கிலாந்து நாட்டின் மறைந்த ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக இன்று (செப்டம்பர் 18) அதிகாலை இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு லண்டன் சென்றடைந்தார்.

ராகுல் நடைபயணம்!

ராகுல் காந்தி இன்று (செப்டம்பர் 18) 11-வது நாள் நடைபயணத்தை கேரளாவில் ஹரிபட் பகுதியில் தொடங்கி அரவக்காடு பகுதியில் நிறைவு செய்கிறார்.

முகமது ஷமிக்கு கொரோனா!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டார்.

இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதல்!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பெண்கள் அணி, இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி ஹோவ் நகரில் இன்று (செப்டம்பர் 18) நடைபெறுகிறது.

தனுஷூடன் இணையும் சந்தீப் கிஷோர்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தில் சந்தீப் கிஷோர் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் இன்று (செப்டம்பர் 18) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

27 கோடி பார்வையாளர்களை கடந்த அரபிக்குத்து!

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக்குத்து பாடல் 27 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

வானிலை நிலவரம்!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (செப்டம்பர் 18) ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

விக்னேஷ் சிவன் பிறந்தநாள்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று (செப்டம்பர் 18) தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பெண்கள் டென்னிஸ் இறுதி போட்டி!

சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் இறுதிப்போட்டி இன்று (செப்டம்பர் 18) நடைபெறுகிறது. செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த லிண்டா, போலந்து நாட்டைச் சேர்ந்த லினெட்டுடன் மோதுகிறார்.

சீட்டா புலியும்… சீறும் அரசியலும்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.