அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழா!
இன்று (செப்டம்பர் 20) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் வெள்ளி விழாவில் கலந்து கொள்கிறார்.
ராகுல் நடைபயணம்!
ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை 13-வது நாளாக, இன்று (செப்டம்பர் 20) கேரள மாநிலம் சேர்தலா பகுதியில் தொடங்கி எர்ணாகுளம் பகுதியில் நிறைவு செய்கிறார்.
பொன்னியின் செல்வன் புரோமோஷன்!
இன்று (செப்டம்பர் 20) கேரளாவில் பொன்னியின் செல்வன் படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெறுகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்!
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி மொஹாலியில் இன்று (செப்டம்பர் 20) துவங்குகிறது.
டெண்டர் முறைகேடு வழக்கு!
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று (செப்டம்பர் 20) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 20) 122-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சூர்யா 42 படப்பிடிப்பு!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் இன்று (செப்டம்பர் 20) துவங்குகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு திசைக் காற்றின் மேக வேறுபாடு காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (செப்டம்பர் 20) ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதிய ஜெர்சியில் தினேஷ் கார்த்திக்!
இந்திய அணி டி20 கிரிக்கெட் போட்டிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஜெர்சி அணிந்த புகைப்படத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 498 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 4,995 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம் : காரணம் என்ன?
அதிகரிக்கும் காய்ச்சலால் பள்ளிகளுக்கு விடுமுறையா?: அன்பில் மகேஷ் விளக்கம்!