இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்!
இன்று (அக்டோபர் 3) ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படைக்கு வழங்கப்படுகிறது.
ராகுல் நடைபயணம்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று ஒற்றுமை நடைபயணம் 25-வது நாளை கர்நாடக மாநிலம் மைசூரில் தொடங்கி டிஎஸ் சத்யா பகுதியில் நிறைவு செய்கிறார்.
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!
நேற்று நடைபெற்ற தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
தசரா முதல் பாடல் வெளியீடு!
தெலுங்கு நடிகர் நானி நடிக்கும் தசரா திரைப்படத்தின் தூம் தாம் தோஸ்தன் என்ற முதல் பாடல் இன்று வெளியாகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 135-வது நாளாக, பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து!
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதிய இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
வானிலை நிலவரம்!
ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
ஈவேரா சாலையில் பர்னபி சந்திப்பில், மழைநீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டுவதால், கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை சந்திப்பிலிருந்து ஈகா சந்திப்பு நோக்கி செல்ல இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 489 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் 5,415 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படவேட்டு பாடல் வெளியீடு!
லிஜூ கிருஷ்ணா இயக்கத்தில், நிவின் பாலி நடிக்கும் படவேட்டு திரைப்படத்தின் மழபாட்டு இன்று வெளியாகிறது.
இது தவறு என்றால் ஆயிரம் முறை செய்வேன்: துரை வைகோ பதில்!
ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் வெளியானது பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ டீசர்!