டாப் 10 செய்திகள்…இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம்!

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் (செப்டம்பர் 19) இன்று வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் மாநாடு!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இன்று (செப்டம்பர் 19)  நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

சென்னை ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி!

சென்னை ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில், ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த லின்டா, போலந்தின் மேக்னா லினெட்டை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

விசாரணை அறிக்கை தாக்கல்!

அதிமுக அலுவலக கலவர வழக்கில் சிபிசிஐடி இன்று (செப்டம்பர் 19) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்கிறது.

இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி!

இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு நீல நிற உடையில் புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 492 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 4,926 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வானிலை நிலவரம்!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (செப்டம்பர் 19)  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சிம்பு வேண்டுகோள்!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தனது ரசிகர்கள் விரும்பும்படி, கமர்ஷியலாக இயக்க வேண்டும் என்று நடிகர் சிம்பு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா!

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று (செப்டம்பர் 19) 121-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆ.ராசாவுக்கு சீமான் ஆதரவு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *