டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

அன்புமணி ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (நவம்பர் 24) நேரில் சென்று பார்வையிடுகிறார்.

ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகை!

மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணத் தொகையாக இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

எல்லை தெய்வ வழிபாடு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு எல்லை தெய்வ வழிபாடு நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

காந்தாரா வெளியீடு!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.

தியாக தினம்!

சீக்கிய மத குரு தலைவர் குருதேஜ் பகதூர் நினைவாக தியாக தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 187-வது நாள் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இலவச தரிசன டிக்கெட்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதத்திற்கான முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.

கால்பந்து போட்டி!

ஃபிபா கால்பந்து போட்டியில் இன்று சுவிட்சர்லாந்து, கேமரூன் அணிகள் மோதுகின்றன. மற்ற போட்டிகளில் உருகுவே, தென் கொரியா மற்றும் போர்ச்சுகல், கானா அணிகள் மோதுகின்றன.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் தமிழகத்தில் 385 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வங்கதேச சுற்றுப்பயணம்: மீண்டும் ரவீந்திர ஜடேஜா விலகல்!

குட்கா வழக்கு: சி.விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0