டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

வந்தே பாரத் ரயில் சேவை!

இந்தியாவின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவையை காந்தி நகர் – மும்பை சென்ட்ரல் இடையே பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 30) துவங்கி வைக்கிறார்.

தொழிற்சாலையை திறந்து வைக்கும் முதல்வர்!

செங்கல்பட்டில் பெகட்ராண் மின்னணு பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் திறந்து வைக்கிறார்.

தேசிய விருது விழா!

68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெறுகிறது. சிறந்த நடிகருக்கான விருதினை சூர்யா பெறுகிறார்.

முதலமைச்சர் ட்விட்டர் ஸ்பேஸ்!

திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைக்கும் ட்விட்டர் ஸ்பேசில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட அரசு என்ற தலைப்பில் இன்று இரவு 8 மணிக்கு பேசுகிறார்.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 531 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் 5,507 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் ரிலீஸ்!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

தமிழகத்தில் இன்று 132-வது நாளாக, பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ராகுல் நடைபயணம்!

ராகுல் காந்தி இன்று 22-வது நாள் ஒற்றுமை நடைபயணத்தை கர்நாடகா மாநிலத்தில் துவங்குகிறார்.

வானிலை நிலவரம்!

ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பாகிஸ்தான் – இங்கிலாந்து மோதல்!

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதும் 6-வது டி20 கிரிக்கெட் போட்டி லாகூரில் இன்று நடைபெறுகிறது.

மழைநீர் வடிகால் பணி : அக்.10-க்குள் நிறைவடையும் – சென்னை மேயர்!

ஸ்டாலின் ஒரு பொம்மை: எடப்பாடி பழனிசாமி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *