டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

காலை சிற்றுண்டி திட்டம்!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 16) காலை சிற்றுண்டி திட்டத்தை துவங்கி வைக்கிறார்.

மழை வெள்ள பாதிப்பு ஆய்வு!

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பார்வையிடுகிறார்.

மயிலாடுதுறை விடுமுறை!

கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

சபரிமலை நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் தமிழகத்தில் 674 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நல்லடக்கம்!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா உடல் இன்று ஹைதராபாத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதால் தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.

புரோ கபடி போட்டி!

இன்றைய புரோ கபடி போட்டியில் பாட்னா பைரேட்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் டபாங் டெல்லி, யுபி யோதா அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 179-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கால் சவ்வு கிழிந்ததற்காக உயிர் பிரிவதா? பிரியா வீட்டில் ஜெயக்குமார்

ஐபிஎல்: தொடங்கியது ஏலப் பேச்சு… எந்தெந்த அணியிடம் எவ்வளவு கோடி இருப்பு?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0