தீபாவளி பண்டிகை!
நாடு முழுவதும் இன்று(அக்டோபர் 31) தீபாவளி பண்டிகை கொண்டாடப் பட்டுவருகிறது. அதே போல் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற தமிழக மக்கள் இன்று காலை முதல் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தேசிய ஒற்றுமை தினம்
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்று(அக்டோபர் 31) தேசிய ஒற்றுமை தினமாக(ராஷ்ட்ரிய ஏக்தா திவஸ்) கொண்டாடப்படுகிறது.
சிங்கார சென்னை அட்டை
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிங்கார சென்னை’ அட்டையை இனி செல்போன் எண் வழங்கி OTP மூலம் உறுதி செய்து பெற்றுக்கொள்ளலாம்.
வீர தீர சூரன் அப்டேட்
விக்ரம் நடிப்பில் அருண் குமார் இயக்கத்தில் உருவாகி அரும் ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும்.
சோலோ வயலின் பாடல்
ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேசிப்பாயா’ படத்தின் Solo Violin பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் வாழ்த்து
சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் இந்திய வம்சாவளி வீரரான சுனிதா வில்லியம்ஸ் காணொளி வாயிலாக அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமரன், பிரதர், பிளடி பெக்கர்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’, ஜெயம் ரவி நடிப்பில் ‘பிரதர்’ மற்றும் கவின் நடிப்பில் ‘பிளடி பெக்கர்’ ஆகிய திரைப்படங்கள் இன்று வெளியாகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஷுப்மன் கில்லும் குஜராத் டைட்டன்ஸும்
ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் ஷுப்மான் கில், ரஷித் கான், பி சாய் சுதர்சன், ராகுல் தெவாடியா மற்றும் ஷாருக் கான் ஆகியோரை தக்கவைக்க வாய்ப்புள்ளது.
மழை அப்டேட்!
தமிழகத்தில் இன்று திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 15 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிச்சன் கீர்த்தனா: ஈஸி மதுரா பேடா
ரியல் ஷூட்டிங்… கிளம்பும் விஜய்
அதுக்குள்ளயா?… மோசமான நிலையில் சென்னை காற்றின் தரம்!