அண்ணாமலை கோவை பயணம்!
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு தரிசனம் செய்ய இன்று (அக்டோபர் 31) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செல்கிறார். இந்த கோயிலுக்கு அருகேதான் சமீபத்தில் கார் வெடிப்பு நிகழ்வு நடைபெற்றது.
கனமழை பெய்யும் மாவட்டங்கள்!
சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
படேல் பிறந்தநாள் – பிரதமர் மரியாதை!
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. படேலின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மரியாதை செலுத்த, பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் கெவாடியா செல்கிறார்.
வேட்பாளர் புகைப்பட மற்றும் கல்வித் தகுதி வழக்கு!
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னங்களை நீக்கிவிட்டு வேட்பாளரின் புகைப்படம், கல்வித் தகுதி மற்றும் வயது ஆகியவற்றைக் கொண்டுவரத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குடியுரிமை சட்டதிருத்த மனுக்கள் விசாரணை!
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் இன்று தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வழங்குகிறது.
தேர்தல் ஆணையம் மாநாடு!
தேர்தல் மேலாண்மை அமைப்பின் பங்கு குறித்து தேர்தல் ஆணையம் நடத்தும் இரண்டு நாள் சர்வதேச மாநாடு இன்று தொடங்குகிறது.
ராகுல் நடைப்பயணம்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெலங்கானா சத்நகர் பேருந்து டிப்போவில் தொடங்கி தொண்டபல்லி பகுதியில் நடைப்பயணத்தை இன்று நிறைவு செய்கிறார்.
மோர்பி பால விபத்து – அதிகரிக்கும் உயிர்பலி!
குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 100 ஐ கடந்தது.
சாலைகளில் குப்பை கொட்டும் கடைகளுக்கு ரூ.500 அபராதம் – சென்னை மாநகராட்சி
உக்ரைனுக்கு ஆதரவாக புதுச்சேரி பிரான்ஸ் தூதரகத்தில் வாசகம்!