டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

ராகுல் மரியாதை!

டெல்லியில் ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி இன்று லால் பகதூர் சாஸ்திரி, வாஜ்பாய், வீர் புமி உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

கன மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று சீர்காழியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சுனாமி நினைவு தினம்!

18-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

நேபாளம் புதிய பிரதமர்!

நேபாள நாட்டின் புதிய பிரதமராக சிபிஎன் மாவோயிஸ்டு கட்சியைச் சேர்ந்த புஷ்ப கமல் தஹால் பிரசந்தா இன்று பதவி ஏற்கிறார்.

வைகுண்ட ஏகாதசி!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்சவம் 4-ஆம் நாள் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு இன்று நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மோதல்!

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது.

வானிலை நிலவரம்!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும்.

சபரிமலை அய்யப்பன் தங்க அங்கி!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 219-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

உக்ரைன் போர்: மேற்கத்திய நாடுகள் பேச்சுவார்த்தையை ஏற்க மறுக்கின்றன – புதின்

இந்தி திணிப்பு : நக்கலுடன் எச்சரித்த கமல்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *