டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

எஸ்.பி.வேலுமணி வழக்கில் தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது.

சிறப்பு ரயில் முன்பதிவு

சபரிமலை சீசனை முன்னிட்டு விசாகப்பட்டினம் – கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயிலில் பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கர்நாடகா – மராட்டியம் எல்லை வழக்கு

கர்நாடகா – மராட்டியம் இடையேயான எல்லை பிரச்சினை குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது.

மீண்டும் வெளியாகும் ரஞ்சிதமே பாடல்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாரிசு’ படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல், கடந்த 5ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. இப்பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இந்த நிலையில், தெலுங்கில் உருவாகியுள்ள ‘ரஞ்சிதமே‘ பாடலை இன்று காலை 9.09 மணிக்கு மீண்டும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சசிகுமாரின் புதிய படம்

இரா.சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் First Look போஸ்டரை நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.

தேசிய விருது வழங்கும் விழா

கேல்ரத்னா, அர்ஜூனா உள்ளிட்ட தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

ஒருநாள் போட்டி

இந்தியா- நியூசிலாந்து மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது.

உலகக்கோப்பை கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்தில் இன்று ‘டி’ மற்றும் ‘சி’ பிரிவில் கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. டி பிரிவில் துனிசியா – ஃபிரான்ஸ் ஆகிய அணிகளும், ஆஸ்திரேலியா – டென்மார்க் ஆகிய அணிகளும் களம் காண இருக்கின்றன. சி பிரிவில் போலந்து – அர்ஜெண்டினா அணிகளும், சவூதி அரேபியா – மெக்சிகோ ஆகிய அணிகளும் மோத இருக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

தொடர்ந்து 193-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வானிலை நிலவரம்

கேரள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி : ஏலம் எடுத்த அதானி

கிச்சன் கீர்த்தனா: மேத்தி பனீர் புர்ஜி

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *