டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க…
ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை!
ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு இன்று (நவம்பர் 23) விசாரிக்கிறது.
ஆளுநரைச் சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி
தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்.
அரசுப் பள்ளிகளில் கலை திருவிழா!
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கலைத்திறனை வளர்ப்பதற்காக இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு சார்பில் கலைத் திருவிழா நடைபெறவுள்ளது.
பிரதமர் மோடியின் குஜராத் பிரச்சாரம்!
குஜராத் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை மீண்டும் பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார்.
சபரிமலைக்குச் சிறப்பு ரயில்!
நவம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி வரை, சென்னை – கொல்லம் (சிறப்பு ரயில்(06061)) வாரம்தோறும் புதன்கிழமை அன்று இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நாக சைதன்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் NC22படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை 10:18மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
ராகுலுடன் பிரியங்கா காந்தி
ராகுல்காந்தி இன்று இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மத்தியப் பிரதேசத்திலிருந்து தொடங்குகிறார். இந்த பாதயாத்திரையில் பிரியங்காகாந்தி இணைந்து கொள்ளவுள்ளார்.
மீனவர்களுக்கு அனுமதி!
கடலூர் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 186வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கால்பந்து – இன்று மோதும் அணிகள்!
இன்று நடக்கும் உலககோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின், கோஸ்டாரிகா ஆகிய அணிகள் மோதுகின்றன.
கோயில்களில் விஐபி தரிசனம் ரத்து: சேகர்பாபு
யானை தாக்கி பெண் இறப்பு: பாஜக எம்.எல்.ஏவுக்கு அடி, உதை!