முதலமைச்சர் மதுரை பயணம்!
முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 29) மதுரை செல்கிறார்.
அன்புமணி நடைபயணம்!
சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று அரியலூர் மாவட்டத்தில் நடைபயணத்தை துவங்குகிறார்.
சிவன் சிலை திறப்பு!
ராஜஸ்தான் மாநிலம் நத்வாரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 369 அடி உயரமுள்ள சிவன் சிலையை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் இன்று திறந்து வைக்கிறார்.
திமுக பொற்கிழி விருது!
திருவண்ணாமலை மாவட்டத்தில், நகர்ப்புற, ஊரக, உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, மூத்த கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
ருத்ரன் Glimpse!
கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தின் Glimpse காட்சிகள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
மருத்துவ படிப்பு கவுன்சிலிங்!
தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று முதல் துவங்குகிறது.
ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 161-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக கோப்பை போட்டி!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
கிச்சன் கீர்த்தனா – ட்ரை ஃப்ரூட்ஸ் சோமாஸ்
இந்தியாவை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்!