பவானி சாகர் அணை திறப்பு!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று (அக்டோபர் 20) முதல் 2023 பிப்ரவரி 16-ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தரவரிசை பட்டியல்!
கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.
ராகுல் நடைபயணம்!
ராகுல் காந்தி இன்று 40-வது நாள் ஒற்றுமை நடைபயணத்தை ஆந்திரப்பிரதேச மாநிலம் குர்னூல் பகுதியில் தொடங்கி செட்னிஹள்ளி பகுதியில் நிறைவு செய்கிறார்.
எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!
இந்தி திணிப்பிற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற உள்ளது.
பாமக பொதுக்கூட்டம்!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
13 படத்தின் டீசர் வெளியீடு!
விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் 13 படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
உலக கோப்பை போட்டி!
இன்று டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நெதர்லாந்து, இலங்கை அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில், நமிபியா, ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 152-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மைக்கேல் டீசர் வெளியீடு!
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் மைக்கேல் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
வானிலை நிலவரம்!
தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
அசோக் கெலாட் vs சச்சின் பைலட்: கார்கே யாருக்கு ஆதரவு?
”ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அவசியம் என்றவர் ஓபிஎஸ்” – ஜேசிடி பிரபாகர்