டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

ரயில்வே மேம்பாலங்கள் திறப்பு!

நெடுஞ்சாலைத் துறை சார்பில் தருமபுரி, சேலம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று (அக்டோபர் 14) திறந்து வைக்கிறார்.

நளினி வழக்கு விசாரணை!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

பிரின்ஸ் பாடல் வெளியீடு!

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படத்தின் Who am I? என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

குடிவாரி கணக்கெடுப்பு பொதுக்கூட்டம்!

குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரையில் இன்று மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

நீட் தேர்வு வழக்கு!

நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக ஆட்சியில் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

வானிலை நிலவரம்!

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சட்டத்துறை மாநாடு!

அனைத்து மாநில சட்டத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் சட்டத்துறை மாநாடு குஜராத்தில் இன்று துவங்குகிறது.

சென்னை மேயர் ஆலோசனை!

வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை செய்கிறார்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 145-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமைச்சரவை கூட்டம்!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் 17ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

அஃப்ரிடியின் பந்துவீச்சை அடித்து ஆடவேண்டும்: காம்பீர் அறிவுரை

எலிமினேஷன்னா என்னா? ஜி.பி முத்து

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.