டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

பசுமை இயக்கம் தொடக்க விழா!

இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கத்தில், பசுமை இயக்கம் தொடக்க விழாவை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 24) துவக்கி வைக்கிறார்.

ராகுல் காந்தி நடைபயணம்!

ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை, 16-வது நாளாக கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் தொடங்கி தோப் ஸ்டேடியம் பகுதியில் நிறைவு செய்கிறார்.

நானே வருவேன் இரண்டாவது பாடல்!

தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான, இரண்டு ராஜா இன்று காலை 10.50 மணியளவில் வெளியாகிறது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா!

நேற்று (செப்டம்பர் 23) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பொன்னியின் செல்வன் புரோமோஷன்!

பொன்னியின் செல்வன் படக்குழுவினர் மும்பையில் இன்று புரோமோஷன் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 126-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

பி.எட் படிப்பு விண்ணப்பம்!

அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்புகளில் சேர இன்று முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இங்கிலாந்து அணி வெற்றி!

நேற்று (செப்டம்பர் 23) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 529 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 5,297 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். பேரணி: ஸ்டாலினுக்கு சீமான் கோரிக்கை!

பாலாற்றில் மீண்டும் கைவைக்கும் ஜெகன்: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.