எடப்பாடி பழனிசாமி மதுரை பயணம்!
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 29) மதுரை, சிவகாசி ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
ராகுல் நடைபயணம்!
ராகுல் காந்தி 21-வது நாள் ஒற்றுமை நடைபயணத்தை,கேரள மாநிலம் நிலம்புர் பகுதியில் தொடங்கி தமிழகத்தின் கூடலூர் பகுதியில் நிறைவு செய்கிறார்.
நானே வருவேன் ரிலீஸ்!
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படம் இன்று வெளியாகிறது.
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!
நேற்று (செப்டம்பர் 28) இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது.
வானிலை நிலவரம்!
ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திரிஷியம் 2 டீசர் வெளியீடு!
அபிஷேக் பதாக் இயக்கத்தில், அஜய் தேவ்கன் நடித்த திரிஷியம் 2 இந்தி திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 131-வது நாளாக, பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தேசிய விளையாட்டு போட்டி!
35-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் இன்று முதல் அக்டோபர் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் 5,498 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தான் அணி வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
எனக்கு பயம் கிடையாது: ஊடகத்தினரை எச்சரிக்கும் டிடிஎஃப் வாசன்
தமிழக அரசுக்கு அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!