ராமானுஜர் சிலை திறப்பு!
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் உள்ள சுவாமி ராமானுஜர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 25) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
வேலைவாய்ப்பு முகாம்!
சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஏஜென்ட் கண்ணாயிரம் ரிலீஸ்!
மனோஜ் பீத்தா இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
காசி தமிழ் சங்கமம்!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொள்கிறார்.
இந்தியா – நியூசிலாந்து மோதல்!
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெறுகிறது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை இன்று ஆஜராக மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மின் கட்டண உயர்வு ஆர்ப்பாட்டம்!
அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கம் மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 188-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அலை கடல் பாடல்!
பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற அலை கடல் பாடல் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.
கால்பந்து போட்டி!
ஃபிஃபா கால்பந்து போட்டியில் இன்று கத்தார், செனகல் அணிகள் மோதுகின்றன. மற்ற பிரிவுகளில் வேல்ஸ், ஈரான் மற்றும் நெதர்லாந்து, ஈக்குவடார் அணிகள் மோதுகின்றன.
கைதிகள் உறவினர்களுடன் பேச இண்டர்காம்!
நாக்கு சிகிச்சைக்கு சென்ற குழந்தைக்கு ஆணுறுப்பில் ஆபரேஷன்: மதுரை ஜிஹெச்சில் நடந்தது என்ன?