டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

ஷின்ஷோ அபே நினைவு தினம் அனுசரிப்பு!

மறைந்த முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 27) கலந்து கொள்கிறார்.

புதுச்சேரியில் முழு அடைப்பு!

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா மனுஸ்மிருதி பேச்சை கண்டித்து, புதுச்சேரியில் இன்று இந்து முன்னணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள்!

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

பத்துதல படப்பிடிப்பு!

சிம்பு நடிக்கும் பத்துதல படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று முதல் ஒரு வாரம் நடைபெற உள்ளது.

நட்புறவு கால்பந்து போட்டி!

இந்தியா, வியட்நாம் அணிகள் மோதும் நட்புறவு கால்பந்து போட்டி இன்று வியட்நாமில் நடைபெறுகிறது.

வானிலை நிலவரம்!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

சேகர்பாபு சகோதரர் தற்கொலை!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அண்ணன் தேவராஜ் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பதி பிரம்மோற்சவ விழா!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

தமிழகத்தில் இன்று 129-வது நாளாக, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மல்லிப்பூ பாடல் வெளியீடு!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் இன்று வெளியாகிறது.

ரெய்டு நடந்த தொழிற்சாலையில் தீ: கோடிக்கணக்கில் சேதம்!

ஆ.ராசா கோவை வருகை: ரூட் சொல்லி முற்றுகையிட பாஜக அழைப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.