எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு!
இமாச்சலப் பிரதேச மாநிலம் பிலாஸ்புர் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 5) எய்ம்ஸ் மருத்துவமனையை துவங்கி வைக்கிறார்.
சந்திர சேகர ராவ் புதிய கட்சி!
தெலங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ், புதிய தேசிய கட்சி அறிவிப்பை இன்று வெளியிடுகிறார்.
விஜயதசமி கொண்டாட்டம்!
நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான இன்று விஜயதசமி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
எஸ்.ஜே.சூர்யா தோற்றம் வெளியீடு!
விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது.
துபாயில் இந்து கோயில்!
துபாயில் முதன்முறையாக கட்டப்பட்ட இந்து கோவில் இன்று திறக்கப்படுகிறது.
தென் ஆப்ரிக்கா அணி வெற்றி!
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் இடையே நேற்று (அக்டோபர் 4) நடைபெற்ற இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில், 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 137-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முத்தாரம்மன் கோவில் சூரசம்ஹாரம்!
குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் இறுதி நாளான இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ட்ரீம் வாரியர் புதிய அறிவிப்பு!
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது புதிய படம் பற்றிய அறிவிப்பை இன்று மாலை 5 மணியளவில் வெளியிடுகிறது.
வானிலை நிலவரம்!
மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெற்றிமாறன் பேச்சு: ஆதரவும் எதிர்ப்பும்!
டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக தமிழக அரசு- அமலாக்கத்துறை ஹேப்பி!