டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

அரசியல்

மெகா தடுப்பூசி முகாம்!

இன்று (செப்டம்பர் 25) தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும்.

ராகுல் நடைபயணம்!

ராகுல் காந்தி 17-வது நாள் ஒற்றுமை நடைபயணத்தை கேரள மாநிலம் திரூர் பகுதியில் தொடங்கி, செருதுருத்தி பகுதியில் நிறைவு செய்கிறார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இறுதிப்போட்டி!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடக்கிறது.

நானே வருவேன் 4 மணி காட்சிகள் ரத்து!

தனுஷ் நடிப்பில் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நானே வருவேன் திரைப்படத்திற்கு 4 மணி காட்சிகளுக்கு பதிலாக 8 மணி காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 127ஆவது நாளாக, பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா!

நேற்று (செப்டம்பர் 24) நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றியது.

பொன்னியின் செல்வன் புரோமோஷன்!

பொன்னியின் செல்வன் படக்குழுவினர் மும்பையில் இன்று படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 533 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் தமிழகம் முழுவதும் 5,349 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாரிசு பொங்கல் ரிலீஸ்!

வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது. இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை நிலவரம்!

மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவர்கள்தான் மாசெக்கள்: வீட்டில் வைத்து அறிவித்த செந்தில்பாலாஜி 

கோவை சம்பவம்: உள்துறை செயலாளரிடம் பாஜக புகார்! 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.