டாப் 10 செய்திகள் : மோடி பிரச்சாரம் முதல் புஷ்பா 2 அப்டேட் வரை!

அரசியல்

தலைமை நீதிபதி ஓய்வு! 
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா இன்று (மே 23)  பணி ஓய்வு பெறுகிறார்.  அவருக்கு பிரிவுபச்சார விழா நடத்தப்படவுள்ளது. புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி!
நேற்று வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இந்த சூழலில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிறைவடையும் தேர்தல் பிரச்சாரம்!
நாளை மறுநாள், உத்தரப் பிரதேசத்தில் 14, ஹரியானாவில் 10, பீகார், மேற்கு வங்கத்தில் தலா 8, டெல்லியில் 7, ஒடிசாவில் 6, ஜார்கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு என 58 தொகுதிகளுக்கு 6ஆம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவுபெறுகிறது.

பஞ்சாபில் மோடி – விவசாயிகள் கருப்புக்கொடி!
பிரதமர் மோடி இன்று பஞ்சாபில் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்நிலையில், பிரதமரின் வருகைக்கு எதிராக சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொட்டபெட்டா சிகரத்துக்கு செல்ல அனுமதி! 
தொட்டபெட்டா சந்திப்பில் செயல்பட்டு வரும் ஃபாஸ்டேக்  சோதனைச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றும் பணி கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்ததால் 7 நாட்களுக்கு தொட்டபெட்டா சிகரம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று முதல் தொட்டபெட்டா சிகரத்துக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

ஆமைகள் தினம்!
ஆமைகள் அதன் வாழ்விடங்களில் பாதுகாப்பாக வாழவும், அழிவில் இருந்து அவற்றை தடுப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ‘உலக ஆமைகள் தினம்’ ஒவ்வொரு ஆண்டும் மே 23ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

மதுரை பொருட்காட்சி!
மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி இன்று தொடங்குகிறது. 27 அரசுத் துறை அரங்குகள், 6 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகள் இந்த பொருட்காட்சியில் இடம்பெறுகின்றன. இன்று முதல் 45 நாள்களுக்கு தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்தப் பொருட்காட்சி நடைபெறவுள்ளது

புஷ்பா 2 செகண்ட் சிங்கிள்!
நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தானா நடிக்கும் புஷ்பா 2 திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் இன்று காலை வெளியாக உள்ளது.

Poco F6 ஸ்மார்ட் போன்
ரெட் மி நிறுவனத்தின் Poco F6 ஸ்மார்ட் போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 6.7 இன்ச் 1.5K OLED திரையுடன் வருகிறது. இதில், 50 மெகாபிக்சல் டூயல் கேமரா அமைப்பு உள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!
பெட்ரோல் விலை 68ஆவது நாளாக இன்றும் எந்த மாற்றமின்றி ரூ 100.75 ஆகவும், டீசல் லிட்டருக்கு 92.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: தினமும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துபவரா நீங்கள்?

கிச்சன் கீர்த்தனா: அவரைப்பருப்பு சாதம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *