டாப் 10 செய்திகள் : காற்றழுத்த தாழ்வு பகுதி முதல் மோடி பிரச்சாரம் வரை!

காற்றழுத்த தாழ்வு பகுதி!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று(மே 22) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஏற்காட்டில் மலர் கண்காட்சி!
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி இன்று  தொடங்கி 26ஆம் தேதி வரை 5 நாட்கள் நடை பெறுகிறது.

ரைசியின் இறுதிச் சடங்கில் ஜக்தீப் தன்கர்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில், இந்தியா சார்பில் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று (மே 22) பங்கேற்கிறார்.

டெல்லியில் பிரதமர் பிரச்சாரம்!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டெல்லி, துவாரகா தொகுதியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

வைகோ பிறந்தநாள்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தனது 80ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சிறப்பு பேருந்துகள்!
பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இன்று 585 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்திலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 330 பேருந்துகளும், பிற இடங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் 225 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

எலிமினேட்டர் சுற்று!
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று  நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், 4ஆவது இடத்தில் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும்.

வைகாசி விசாகம்!
முருக பெருமான் அவதரித்த நாளான, வைகாசி விசாகம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு வடபழனி முருகன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் என தமிழ்நாடு முழுவதும் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.

எங்கெங்கு மழை!
இன்று மற்றும் நாளை, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தேனி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!
பெட்ரோல் விலை 67ஆவது நாளாக இன்றும் எந்த மாற்றமின்றி ரூ 100.75 ஆகவும், டீசல் லிட்டருக்கு 92.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: நாள்தோறும் 10,000 நடைகள் என்பது சாத்தியமா?

பியூட்டி டிப்ஸ்: மாறிவரும் பருவநிலைக்கேற்ப உங்களை அழகாக்கிக் கொள்வது எப்படி?

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts