டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு!

ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இன்று (மே 18) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

கர்நாடக முதல்வர் யார்?

டெல்லியில் மூன்று நாட்களாக நடைபெற்ற ஆலோசனையை தொடர்ந்து இன்று கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.

தொமுச பேரவை பொன்விழா  மாநாடு!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெறும் தொமுச பேரவை பொன்விழா மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறார்.

ஆன்லைனில் ஐபிஎல் டிக்கெட்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.

சர்வதேச கண்காட்சி!

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச அருங்காட்சியகக் கண்காட்சி 2023-ஐ பிரதமர்  மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மே 18ஆம் தேதியான இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி முள்ளிவாய்க்கால் முற்றத்திலும், உலகில் தமிழர் வாழும் பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

திருப்பதி  டிக்கெட்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் மற்றும் சேவை டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வானிலை அப்டேட்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2- 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் தொடர்ந்து 362ஆவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமுத்திரக்கனி பவன் கல்யாண் படத்தலைப்பு!

சமுத்திரக்கனி இயக்கத்தில். பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் நடித்துள்ள படத்தின் தலைப்பு இன்று வெளியாகிறது.

விஷச்சாராய மரணம்: அறிக்கை கேட்கும் ஆளுநர்

டாஸ்மாக் கடையில் ரூ.10 கூடுதல் கட்டணமா? நிருபர்களுடன் செந்தில் பாலாஜி வாக்குவாதம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *