டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

மனதின் குரல்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 27) காலை 11 மணியளவில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசுகிறார்.

மாற்றுத்திறனாளிகள் நடைபாதை!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

மாவீரர் நாள்!

நாம் தமிழர் கட்சி சார்பில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சேலத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்தியா – நியூசிலாந்து மோதல்!

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெறுகிறது.

கார்த்திகை தீபத்திருவிழா!

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

உதயநிதி பிறந்தநாள்!

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

அமமுக ஆலோசனை கூட்டம்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று சென்னையில் இதய தெய்வம் அம்மா பேரவை மாநில மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 190-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கால்பந்து போட்டி!

ஃபிஃபா கால்பந்து போட்டியில் இன்று ஜப்பான், கோஸ்டா ரிகா அணிகள் மோதுகின்றன. மற்ற பிரிவுகளில் பெல்ஜியம், மொரோக்கோ மற்றும் குரோடிகா, கனடா அணிகள் மோதுகின்றன.

வானிலை நிலவரம்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.

50 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் தரவுகள் விற்பனை?

டிஜிட்டல் திண்ணை:  சூர்யா-டெய்சி 19 நிமிட ஆடியோ: பாஜக விசாரணையில் வெளிவந்த பகீர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0