டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

காசி தமிழ் சங்கமம்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 19) துவங்கி வைக்கிறார்.

உலக பாரம்பரிய வாரம்!

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு இன்று முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை கட்டணமின்றி பார்வையிடலாம்.

கன மழை ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்க உள்ளார்.

பசுமை விமான நிலையம்!

அருணாச்சல பிரதேசத்தில் பசுமை விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைக்கிறார்.

உயர்நீதிமன்ற வாசல்கள் மூடல்!

சென்னை உயர்நீதிமன்ற வாசல்கள் இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை சம்பிரதாயமாக மூடப்படுகிறது.

குரூப் 1 தேர்வு!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 92 இடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 182-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏஜெண்ட் கண்ணாயிரம் ஸ்னீக் பீக்!

மனோஜ் பீத்தா இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் ஸ்னீக் பீக் இன்று வெளியாகிறது.

புரோ கபடி போட்டி!

இன்றைய புரோ கபடி போட்டியில் யுபி யோதா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் யு மும்பா அணிகள் மோதுகின்றன.

பழைய ஓய்வூதிய திட்டம்: பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்!

டிஜிட்டல் திண்ணை: அரசின் நியமனங்கள்- திமுக நிர்வாகிகள் குமுறல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0